தீபாவளியை குறிவைக்கும் தக் லைப் படக்குழு
ADDED : 620 days ago
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சிலம்பரசன், அசோக் செல்வன், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு டில்லி, ஜெய்சல்மர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து இவ்வருட தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.