உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோனியா அகர்வாலின் 'பிளாக் மேஜிக்' படம்: 5ம் தேதி வெளியாகிறது

சோனியா அகர்வாலின் 'பிளாக் மேஜிக்' படம்: 5ம் தேதி வெளியாகிறது

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், உருவாகி உள்ள படம் '7ஜி'. சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 5ம் தேதி வெளிவருகிறது.

படம் பற்றி இயக்குனர் ஹாருன் கூறியதாவது: ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு பீல் குட் ஹாரர் இது உருவாகி உள்ளது.

புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில், பரபரவென நகரும் திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !