‛தீரன் அதிகாரம் இரண்டு' : மீண்டும் கார்த்தி - வினோத் கூட்டணி
ADDED : 466 days ago
சதுரங்க வேட்டை படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார் வினோத். அதன் பிறகு அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் தற்போது விஜய் நடிக்கும் 69 வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை முடித்ததும் மீண்டும் கார்த்தி உடன் கூட்டணி அமைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்குகிறார் வினோத். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கைதி- 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், 2026ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது .