டாக்சிக் படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர்
ADDED : 499 days ago
மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் தனது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் யஷ்ஷிற்கு அக்காவாக நடிகை நயன்தாரா மற்றும் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் மலையாளத்தில் பிஸியான கதாநாயகனாக வலம் வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.