'காளிதாஸ்' 2ம் பாகம் துவங்கியது
ADDED : 454 days ago
2019ம் ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'காளிதாஸ்'. ஸ்ரீ செந்தில் இயக்கி இருந்தார். பரத், பாலிவுட் நடிகை ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதிலும் பரத் நடிக்கிறார். அவருடன் அஜய் கார்த்திக் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. சிவகார்த்திகேயன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.