விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது!
ADDED : 6 minutes ago
நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என்று பன்முகம் காட்டி வரும் விஜய் ஆண்டனி தற்போது சசி இயக்கும் நூறு சாமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது அக்கா மகன் அஜய் தீஷன் என்பவர் ஹீரோவாக நடிக்கும் பூக்கி என்ற படத்தை தயாரிக்கிறார் விஜய் ஆண்டனி. கணேஷ் சந்திரா இயக்கும் இந்த படத்தில் தனுஷா நாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் பாண்டியராஜன், சுனில், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியாகிறது. மேலும், காதல் காமெடி கலந்த கதையில் உருவாகும் இந்த படத்தின் மனசு வலிக்குது என்ற முதல் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் ஆண்டனியும், கரேஷ்மா ரவிச்சந்திரன் என்பவரும் இணைந்து இசையமைத்து பாடியிருக்கிறார்கள்.