உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி

பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி

மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் மோகன்லால், மம்முட்டி இருவரும் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் படம் பேட்ரியாட். இவர்களை தவிர பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். விஸ்வரூபம் பட எடிட்டரும் டேக் ஆப், மாலிக் உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார், மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்ட்டோ ஜோசப் தயாரித்துள்ளார். வரும் ஏப்ரல் 27ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் திடீரென கேரளா திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு இந்த படத்தை தியேட்டரில் திரையிட திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது வழக்கமாக கேரளாவில் இப்படி பெரிய படம் வெளியாகும்போது முதல் வாரம் தயாரிப்பாளருக்கு வசூலில் 60% தொகையும் இரண்டாவது வாரம் 55% மூன்றாவது வாரம் 50% என கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் பேட்ரியாட் பட தயாரிப்பாளரோ முதல் இரண்டு வாரங்களுக்கும் வசூலில் 60% பங்குத் தொகையாக கேட்கிறாராம்.

இதனால் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு என கருதிய கேரள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இந்த படத்தைத் திரையிட திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் கிட்டத்தட்ட 50 நாட்கள் இருப்பதாலும் மம்முட்டியின் நிழல் போன்ற ஒருவர்தான் தயாரிப்பாளர் என்பதாலும் இந்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !