உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பாண்டியன் இனி என் நண்பர்' : வழி தெரியாமல் தவித்த மம்மூட்டிக்கு உதவிய தமிழர்

‛பாண்டியன் இனி என் நண்பர்' : வழி தெரியாமல் தவித்த மம்மூட்டிக்கு உதவிய தமிழர்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. இதை அவரே தயாரிக்க, நிதீஷ் சகாதேவ் இயக்குகிறார். படப்பிடிப்பை முடித்து அவசரமாக விடியற்காலை மூன்று மணியளவில் காரைக்குடியில் இருந்து கேரளா கிளம்பினர். அவருடன் அவரது மேலாளர் ஜார்ஜ், தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷாரடி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இவர்கள் சென்ற கார் திருப்பத்தூர் வந்தபோது நெடுஞ்சாலை மூடப்பட்டு இருந்தது. கூகுள் மேப் என பல்வேறு வழிகளில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக சுற்றி உள்ளனர். ஆனால் கேரளா செல்லும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கடுப்பான மம்முட்டி நாம திரும்ப காரைக்குடிக்கே போகலாம்'' என்றார். டிரைவரும் காரை திருப்பினார். அந்தநேரத்தில் யாரும் இல்லாததால் உதவி கேட்க முடியவில்லை.

பின்னர் ஒரு பெட்ரோல் பங்கில் ஒருவரிடம் வழி கேட்க அவரோ இவர்கள் ஏற்கனவே சுற்றித்திரிந்த பாதையை தான் கூறினார். அப்போது அங்கு உறங்கி கொண்டிருந்த ஒருவர் இவர்கள் அருகே வந்து, ‛நீங்கள் கேரளாவா' என கேட்க, ‛ஆம்' என்று இவர்கள் சொல்ல, அந்த நபர் காரில் இருந்த மம்முட்டியை பார்த்து திகைத்து போய் நின்றார். பின்னர் ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு என்னை பாலோ பண்ணி வாங்க என 15 கிலோ மீட்டருக்கு கூட்டிச் சென்று கேரளா செல்லும் பாதையை காண்பித்துள்ளார்.

அவருக்கு நன்றி சொல்ல விடை பெற தயாரானார் மம்மூட்டி. அப்போது ரமேஷ் பிஷாரடி, எவ்வளவு நல்ல மனிதர்.... அவர் நாளைக்கு யாரிடமாவது மம்முட்டியயை பார்த்தேன்.... அவருக்கு வழியை காண்பித்தேன் என்று சொன்னால் நம்புவங்களா ? என கேட்டார். உடனே மம்மூட்டி காரில் இருந்து இறங்கி ‛உங்க பெயர் என்ன கேட்க அவரோ பாண்டியன் என சொன்னார். உடனே அவரது போனை வாங்கி ரமேஷிடம் கொடுத்து பாண்டியனை கடிப்பிடித்தார் மம்முட்டி, அதோடு, பாண்டியன் இனி என் நண்பர் என்று சொல்லி போட்டோவும் எடுத்து கொடுத்தார். பின்னர் நன்றி சொல்லி விடைபெற்றார்.

இந்த விஷயம், இதுதொடர்பான வீடியோ, பாண்டியன் செய்த உதவி, மம்முட்டியின் பண்பு உள்ளிட்ட விஷயங்கள் வலைதளங்களில் வைரலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !