உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு

சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை த்ரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வருகிறார். தற்போதும் ஹீரோயினாக வலம் வருகிறார். நடிகராக இருந்த விஜய் எதிர்கொண்ட முதல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். அவரது ஆட்சி 100 நாட்களை கடக்க உள்ளது.

முதல்வர் விஜயின் தோழியான த்ரிஷா அவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து அஜித்தின் தாயார் இறந்த சமயத்தில் அவருக்கு ஆறுதல் தெரிவிக்க விஜய் சென்றபோது த்ரிஷாவும் உடன் சென்றார்.

இந்நிலையில் இன்று நாட்டின் 80வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. முதல்வரான பிறகு முதல் முறையாக விஜய் சென்னை, கோட்டையில் கொடியேற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த தருணத்தை நேரில் காண நடிகை த்ரிஷாவும் அவரது அம்மா உமா உடன் வந்திருந்தார். மேலும் முதல்வர் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா ஆகியோரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !