மேலும் செய்திகள்
பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது
413 days ago
‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன்
413 days ago
அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர்
413 days ago
ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ‛அந்தாதூன்' படம் தமிழில் ‛அந்தகன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரகனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு, இயக்குனர் மாற்றம் போன்ற பிரச்னைகளால் நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்தப்படம் ஒருவழியாக ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. வரும் ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸ் என அறிவித்து இருந்தனர். அந்தசமயம் விக்ரமின் ‛தங்கலான்', கீர்த்தி சுரேஷின் ‛ரகு தாத்தா' மற்றும் அருள்நிதியின் ‛டிமான்டி காலனி 2' ஆகிய படங்களின் வெளியீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு படங்களுக்கும் கணிசமான தியேட்டர் கிடைக்குமா என்ற சூழல் இருந்தது. தற்போது அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி ஆக., 15க்கு பதில் ஒருவாரம் முன்பே ஆக., 9ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
413 days ago
413 days ago
413 days ago