'பொண்ணா அடக்கமாலாம் இருக்க முடியாது' : கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா டிரைலர்
ADDED : 512 days ago
சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை நாயகியாக நடித்துள்ள படம் ‛ரகு தாத்தா'. அவருடன் தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 2:25 நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரில் 'பொண்ணா அடக்கமாலாம் இருக்க முடியாது' என கீர்த்தி சுரேஷின் அதிரடி வசனத்துடன் டிரைலர் ஆரம்பிக்கிறது.
ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊரில் ஹிந்தி படிக்க ஆசைப்படும் பெண்ணாக அவர் நடித்துள்ளார். ஹிந்தி விஷயத்தை வைத்து காமெடியாக இந்த படத்தை எடுத்துள்ளனர் என டிரைலரை பார்க்கையில் புரிந்து கொள்ள முடிகிறது. படம் ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில் சென்சாரில் யு சான்று பெற்றுள்ளனர். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாகிறது.