மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
426 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
426 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
426 days ago
ஸ்ரீவெற்றி இயக்கத்தில் அஸ்வின், அபர்ணதி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛நாற்கரப்போர்'. சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‛‛அபர்ணதி நல்ல நடிகை, ஆனால் அவர் விழாவிற்கு வராதது வருத்தமே. இப்போதெல்லாம் நடிகைகள் புரமோஷனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் சாபக்கேடாகவே மாறிவிட்டது. அபர்ணதியை இப்பட விழாவிற்கு நான் போனில் அழைத்தபோது அதற்கு தனியாக ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றார். மேலும் அவர் அருகில் யார் அமர வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். அதையெல்லாம் நான் பேசினால் சர்ச்சையாகி விடும்.
பின்னர் ஓரிரு நாளில் தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தவர் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார். ஆனால் வரவில்லை. கேட்டால் நான் அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறிவிட்டார். அவர் அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். இப்படிப்பட்ட நடிகைகள் தேவையில்லை. அது தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள்'' என வருத்தத்துடன் பேசினார்.
டிவி நிகழ்ச்சியில் பிரபலமாகி பின்னர் ஜெயில், இறுகப்பற்று போன்ற படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அபர்ணதி. வளர்ந்து வரும் நடிகையான இவர் இப்படி பேசியிருப்பது திரையுலகில் அவர் மீது அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
426 days ago
426 days ago
426 days ago