உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை சந்தியா ராஜூக்கு குடியரசு தலைவரின் கௌரவம்

நடிகை சந்தியா ராஜூக்கு குடியரசு தலைவரின் கௌரவம்

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரால் 'அட் ஹோம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு அன்று மாலை நடக்கும் விருந்து நிகழ்ச்சியாகும்.

இதில் மூத்த அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், மற்றும் பிற குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜூ கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான ஜனாதிபதியின் அழைப்பை அரசு அதிகாரிகள் அவரை சந்தித்து வழங்கினார்கள்.

சந்தியா ராஜூ தனது முதல் தெலுங்குத் திரைப்படமான 'நாட்டியம்' படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர் . இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தலைவர் தொழிலதிபர் பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகள். ஐதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலாபிலிம்ஸின் நிறுவனராகவும் சந்தியா ராஜூ உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !