வாடிவாசல் : எந்த பிரச்னையும் இல்லை என்கிறார் தாணு
ADDED : 464 days ago
சூர்யா நடிப்பில் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ‛வாடிவாசல்'. ஆனால் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதம் ஆகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “கடந்த மாதம் நானும், வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து வாடிவாசல் படத்தின் பணிகளை குறித்து பேசினோம். தற்போது இப்படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளோம். இதற்காக மதுரையில் அலுவலகம் அமைந்துள்ளோம். 3 நாட்கள் படப்பிடிப்பு எடுத்து இதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தோம். இதையடுத்து லண்டனில் உள்ள ஜூராசிக் பார்க் படத்தை எடுக்க உறுதுணையாக இருந்த கலைஞர் ஒருவரிடம் பேசியுள்ளோம். அதற்காக தான் காலதாமதம் ஆகி வருகிறது. வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை” என்றார்.