அஷ்வதிக்கு அடித்த ஜாக்பாட் : வரிசையாக குவியும் வாய்ப்புகள்
ADDED : 406 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் தொடரில் வேதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் அஷ்வதி. அந்த தொடர் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்த நிலையில், உடனடியாக மற்றொரு டிவியில் ஒளிபரப்பான மலர் தொடரில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மலர் கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஷர்மா போல் அஷ்வதியால் நடிக்க முடியாது என பலரும் நினைத்தனர். ஆனால், தற்போது மலர் தொடரில் அஷ்வதி ஹீரோயினாக கலக்கி வருகிறார்.
இந்நிலையில், அவரது நடிப்பு திறமைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் மலையாளத்தில் ஒளிபரப்பாகவுள்ள அபூர்வாகம் என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அஷ்வதிக்கு கிடைத்துள்ளது. அதன் புரோமோ தற்போது வைரலாகும் நிலையில் அஷ்வதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.