காதலனை கரம்பிடித்த சூப்பர் சிங்கர் பிரபலம்
ADDED : 464 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ப்ரியா ஜெர்சன். சீசன் 9ல் ரன்னர் பட்டத்தை தட்டிச்சென்ற இவருக்கு தமிழ்நாட்டில் தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நீண்ட நாட்களாக சார்லி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் ப்ரியா ஜெர்சனுக்கு திருமண வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.