உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெளியானது ‛தி கோட்' : ரசிகர்கள் கொண்டாட்டம்

வெளியானது ‛தி கோட்' : ரசிகர்கள் கொண்டாட்டம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‛தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படம் இன்று (செப்., 5) உலகம் முழுக்க வெளியானது. சுருக்கமாக ‛தி கோட்' என அழைக்கப்படும் இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக் ஷன் படத்துடன் நிறைய டுவிஸ்ட் உடன் இந்த படம் உருவாகி உள்ளது. விஜய் அரசியல் கட்சி துவங்கிய பின்னர் இந்த படம் வெளியாவதால் அதிக எதிர்பார்ப்பு படத்திற்கு இருந்தது. அதை ஓரளவுக்கு பூர்த்தி செய்யும் விதமாகவே படம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 1000 தியேட்டர்களில் கோட் படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் முதல் ஷோ துவங்கியது. அதேசமயம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிறமாநிலங்களில் காலை 4 மணி, 5 மணிக்கே காட்சிகள் துவங்கி விட்டதால் படம் பற்றிய ரிசல்ட் தெரியவந்துள்ளது. கோட் படம் வெளியான தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம், பாட்டு என தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

‛கோட்' படத்தில் நிறைய டுவிஸ்ட்கள் இருப்பதால் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன. அதோடு விஜயகாந்த், சிவகார்த்திகேயன், திரிஷா போன்றோர் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !