விக்ராந்தின் ‛தி கில்லர் மேன்' பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
ADDED : 398 days ago
கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான விக்ராந்த், அதன்பிறகு கோரிப்பாளையம், பாண்டியநாடு, சுட்டு பிடிக்க உத்தரவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ‛வில் அம்பு' என்ற படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கி உள்ள ‛தி கில்லர் மேன்' என்ற படத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த்.
இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.