மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
358 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
358 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
358 days ago
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ஒரு வாரத்திற்கு முன்பும், ஒரு வாரத்திற்கு பின்பும் மற்ற படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். தியேட்டர்கள் கிடைக்காமல் போவதே இதற்குக் காரணம். கடந்த வாரம் 5ம் தேதி விஜய் நடித்த 'தி கோட்' படம் தமிழக தியேட்டர்களை பெருவாரியாக ஆக்கிரமித்தது. இந்த வாரம் வரையிலும் அந்தப் படம் தாக்குப் பிடித்து ஓட வாய்ப்புள்ளது. அதனால், மற்ற படங்களை வெளியிட தியேட்டர்கள் நிச்சயம் கிடைக்காது. அதனால், இந்த வார வெள்ளிக்கிழமையான நாளை (செப்டம்பர் 13ம் தேதி) ஒரே ஒரு படம்தான் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவேக் குமார் இயக்கத்தில், ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் மற்றும் பலர் நடித்த 'கொட்டேஷன் கேங்' படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், அப்போது இப்படம் வெளியாகவில்லை. நாளைய வெளியீட்டிற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.
அதே சமயம், அடுத்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
358 days ago
358 days ago
358 days ago