உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கின்னஸ் சாதனை படைத்த ‛ராக்கா' படம்

கின்னஸ் சாதனை படைத்த ‛ராக்கா' படம்

‛ஜவான்' படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூனை வைத்து ‛ராக்கா' என்ற படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இதில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக் ஷன் கலந்த கதையில் பிரமாண்டமாய் உருவாகிறது. சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பலரும் நடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் அட்லிக்கு இன்று பிறந்தநாள். இதையொட்டி படத்தின் டீசர் அல்லது முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக படம் கின்னஸ் சாதனை படைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‛‛வரலாறு படைக்கப்பட்டது. இந்தியத் திரைப்படத் துறையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரு உலகளாவிய வெற்றி. ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை வைத்து ‛மோஷன் கேப்சரிங்' தொழில்நுட்பத்தில் பிடிக்கப்பட்ட படம் என்பதற்காக ‛ராக்கா' உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று சாதனையை குறிக்கும் வகையில் அல்லு அர்ஜூன் மற்றும் அட்லி ஆகியோர் கின்னஸ் சாதனை சான்றிதழைப் பெற்றனர்'' என தெரிவித்துள்ளனர்.

ராக்கா படம் அடுத்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

HoneyBee, Chittoir
2026-09-22 21:54:33

அது எத்தனை சிடிக்களின் மறு அவதாரமோ. அட்லி பழைய இட்லியில் புதிய ஐட்டம் செய்து இருப்பான்