அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்!
ADDED : 741 days ago
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத், கண்மணி மனோகரன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அண்மையில் இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஹல்தி நிகழ்ச்சியை மகாபலிபுரத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் படுபயங்கரமாக வைரலாகி வருகின்றன.