கவின் பட இயக்குனருடன் இணையும் ஹரிஷ் கல்யாண்
ADDED : 383 days ago
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். வித்தியாசமான கதைகள தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த லப்பர் பந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது நூறு கோடி வானவில், டீசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்து கவினை வைத்து லிப்ட் என்ற படத்தை தந்த இயக்குனர் வினித் வர பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் மலையாளம் நடிகர் செம்பன் வினோத் நடிக்கவுள்ளார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.