இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர்
ADDED : 581 days ago
பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை போன்ற பல படங்களில் படத்தொகுப்பாளர் ஆக பணியாற்றியவர் லியோ ஜான் பால். சமீபகாலமாக இவர் படம் ஒன்றை இயக்குவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் இது குறித்து தகவல் கிடைத்துள்து. அதன்படி, லியோ ஜான் பால் இயக்குனர் ஆக அறிமுகமாகும் முதல் படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முழுவதும் நிறைவு பெற்று தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.