மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின்
ADDED : 363 days ago
இயக்குனர் மிஷ்கின், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். வெற்றி, தோல்வியை கடந்து மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் உள்ளதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.
சமீபகாலமாக சவரக்கத்தி, மாவீரன், லியோ போன்ற சில படங்களில் மிஷ்கின் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது ' ஓல்ட் இஸ் கோல்ட்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் மிஷ்கின். இப்படத்தை ரைட்டர் பட இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப்பின் உதவி இயக்குநர் கோகுல் என்பவர் இயக்குகிறார். ‛நந்தலாலா' படத்திற்கு அப்புறம் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மிஷ்கின் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.