'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர்
ADDED : 377 days ago
'ஆர்ஆர்ஆர்' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் 'தேவரா'. இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டார்கள். பத்து நாட்களில் இப்படம் 466 கோடி வசூலித்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் 'தேவரா' படத்தின் வரவேற்பு குறித்தும், வசூல் குறித்தும் என்டிஆர் பேசியுள்ளார். படம் மிகப் பெரிய வசூலையும், வெற்றியையும் பெறாதது குறித்து தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய ரசிகர்கள் ஒரு படத்தை அதிகமாகக் கிண்டலடிக்கிறார்கள், அவர்கள் படத்தை பொழுதுபோக்காகப் பார்ப்பதில்லை. அதை அதிகமாக ஆராய்ந்து, விமர்சன ரீதியாகப் பார்க்கிறார்கள். இதுதான் பல படங்கள் குறைவான வரவேற்பைப் பெறக் காரணமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.