உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா


தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் பீக்கில் இருந்த சமயத்தில் மலையாள நடிகர் முகேஷை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணமான சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதேசமயம், 2011-ல் தான் இவர்களுக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்தது. இவர்களுக்கு ஷ்ரவண் மற்றும் தேஜஸ் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில். தான் தனித்து வாழத் தொடங்கிச் சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள சரிதா, தனது பிள்ளைகளைத் தனியாக வளர்க்கும் வாய்ப்பை வழங்கியதற்காகத் தனது முன்னாள் கணவர் முகேஷுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்த 30 ஆண்டுகளில் ஒரு வலிமையான அம்மாவாகத் தன்னைக் கொண்டாடுவதாகக் கூறியுள்ளா சரிதா. தனித்துவிடப்பட்டதால் தான் இவ்வளவு தைரியமான பெண்ணாக மாற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

என்றும் இந்தியன், Kolkata
2026-05-18 16:19:54

இதெல்லாம் இந்த பேப்பரில் டப்பா அடிக்க மட்டும் தான் லாயக்கு ???30 ஆண்டுகளாக தனிமை???அப்படின்னா 1996லிருந்து???அப்போ முதல் கணவரா???இரண்டாம் கணவரா??? இது பேப்பரில் ஒரு பெரிய செய்தி???


sankaran, hyderabad
2026-05-18 09:51:33

சரிதாவுக்கு முகேஷ் இரண்டாவது கணவர்.. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாள் கல்யாணம் ஆனவர்.. சினிமாவிற்கு வருவதற்காக முதல் கணவரை விவாகரத்து செய்தவர்.. எல்லாம் தற்குறிகள்..


K Seetharaam, Tenkasi
2026-05-17 18:08:44

she should regret for the deprivation of father love/affection to her children.


Minimole P C, chennai
2026-05-17 08:50:06

what is there to be proud of being single parent. how much the children would have lost the love/company of their father.