உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்!

ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்!


கேஜிஎப் பட நாயகன் யஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கும் 'டாக்ஸிக்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரோஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், பின்னர் ஜூன் நான்காம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். அதன் பிறகு காலவரையறை இன்றி இந்த படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் டாக்ஸிக் படம் குறித்து தற்போது வெளியாகி இருக்கும் ஒரு செய்தியில், இந்த படத்தின் ஓடிடி ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருக்கும் நடிகர் யஷ் எதிர்பார்க்கும் தொகையை ஓடிடி தளங்கள் வழங்க தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதனால் தான் இந்த படம் தாமதமாகி வருவதாக கூறுகிறார்கள். மேலும், இந்த படத்தில் ஹாலிவுட் திரைப்பட விநியோக முறையை பின்பற்றுவதாகவும், அதனால் முதலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் தங்களுக்கு சாத்தியமான விநியோகஸ்தர்களிடம் படத்தை விற்பனை செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !