உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் படம் விரைவில் துவங்கும்: சிறுத்தை சிவா கொடுத்த 'அப்டேட்'

அஜித் படம் விரைவில் துவங்கும்: சிறுத்தை சிவா கொடுத்த 'அப்டேட்'


தற்போது 'விடாமுயற்சி' படத்தை அடுத்து 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த நிலையில் தற்போது 'கங்குவா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இயக்குனர் சிறுத்தை சிவா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'விரைவில் அஜித்தை ஐந்தாவது முறையாக இயக்க தான் அவரிடத்தில் கதை சொல்லி இருப்பதாகவும், அந்த படம் குறித்து நானே அறிவிப்பதை விட அஜித்தே அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். அப்படம் விரைவில் தொடங்கும்' என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதனால் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் படங்களை தொடர்ந்து அஜித்தும் சிறுத்தை சிவாவும் ஐந்தாவது முறையாக விரைவில் இணைவார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !