உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்புள்ள அப்பா சூப்பர் லுக்- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கமெண்ட்!

அன்புள்ள அப்பா சூப்பர் லுக்- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கமெண்ட்!


இந்தியன்- 2 படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 'தக்லைப்' படத்தில் நடித்து வந்த கமல்ஹாசன் தற்போது அந்த படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த படத்திற்காக புதிய லுக்கிற்கு மாறி இருக்கிறார் கமல். அது குறித்த புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. அதோடு, 'புதிய பயணம், புதிய லுக், புதிய ஆரம்பம்' என்ற கேப்ஷன் கொடுத்துள்ளார்கள். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கமலின் அந்த புதிய தோற்றத்தை பார்த்துவிட்டு அவரது மகளான ஸ்ருதிஹாசன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், 'அன்புள்ள அப்பா சூப்பர் லுக்' என்று பதிவிட்டு இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !