உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி

மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி


தெலுங்கில் தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நானி அவரது 33வது படத்தில் நடிக்கின்றார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இந்த நிலையில் அனிருத்தின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே நானி நடித்த கேங் லீடர், ஜெர்ஸி ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்போது நானி - அனிருத் கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !