மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
318 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
318 days ago
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் முகேஷ். பிரபல தமிழ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவர். தற்போது கொல்லம் தொகுதி கம்யூனிஸ்ட் எம்எல்ஏவாக உள்ளார். இந்தநிலையில் முகேஷ் கடந்த 2011ம் ஆண்டு நடிகை ஒருவரை சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி திருச்சூர் மாவட்டம் வடக்காஞ்சேரியில் உள்ள ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த நடிகை வடக்காஞ்சேரி போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் முகேஷை மரடு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே ஆலுவாவை சேர்ந்த ஒரு நடிகையும் முகேஷுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்திருந்தார். திருச்சூர் அருகே உள்ள வாழானிக்காவு என்ற இடத்தில் வைத்து நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த 2 வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு கேரள ஐகோர்ட்டில் நடிகர் முகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கு விசாரணைக்காக நடிகர் முகேஷ் வடக்காஞ்சேரி போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் பதிவு செய்து கொண்டனர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட முகேஷ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
318 days ago
318 days ago