உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்கா - சிவகார்த்திகேயனின் முதல் 'மில்லியன் டாலர்' வசூல்

அமெரிக்கா - சிவகார்த்திகேயனின் முதல் 'மில்லியன் டாலர்' வசூல்


தமிழ்த் திரைப்படங்கள் அமெரிக்காவிலும் வெளியாகி அங்கும் குறிப்பிடத்தக்க வசூலை ரஜினியின் 'சிவாஜி' பட காலத்திலிருந்து நிகழ்த்தி வருகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோரது படங்கள்தான் இதுவரையில் அமெரிக்காவில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் என்ற அளவீட்டைக் கடந்துள்ளன.

இப்போது அந்த சாதனை வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். கடந்த வாரம் அவர் நடித்து வெளியான 'அமரன்' படம் நேற்றோடு 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வாரமும் நல்ல வரவேற்புடன் 'அமரன்' படம் அமெரிக்காவில் ஓட வாய்ப்புள்ளது என்ற கூடுதல் தகவலையும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 'அமரன்' படம் சிவகார்த்திகேயனை தமிழகத்தில் மட்டுமல்லாது, தென்னிந்தியா, வெளிநாடுகள் என பல இடங்களிலும் அடுத்த கட்டத்தை நோக்கி உயர்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !