உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீக்கிரம் நடிக்க வாங்க லாவண்யா!

சீக்கிரம் நடிக்க வாங்க லாவண்யா!


சின்னத்திரை செய்தி வாசிப்பாளர்களான பிரியா பவானி, சரண்யா துராடி, அனிதா சம்பத் ஆகியோர் சீரியல், சினிமா என நெக்ஸ்ட் லெவலுக்கு சென்று விட்டனர். அந்த வரிசையில் தற்போது லாவண்யா ஸ்ரீராமும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். செய்தி வாசிப்பாளரான லாவண்யா மாடலிங்கில் களமிறங்கி அசத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் போட்டோஷுட்டுகளுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. பொன்னியின் செல்வன் வெளியான போது லாவண்யா வெளியிட்ட பூங்குழலி கெட்டப் புகைப்படங்கள் படு ரீச்சானது. இந்நிலையில், லாவண்யாவின் சமீபத்திய புகைப்படங்களில் அவரது அழகிய தோற்றத்தை கண்டு மயங்கிய ரசிகர்கள் லாவண்யாவை ஹீரோயின் மெட்டீரியல் என வர்ணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !