உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி - கமலுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன? - லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்

ரஜினி - கமலுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன? - லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்

கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினி நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ரஜினி, கமலுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அவர் கூறுகையில், ரஜினியை பொறுத்தவரைக்கும் எப்போதுமே அவர் இயக்குனர்களின் நடிகர். நாம் என்ன சொல்கிறோமோ அதை உள்வாங்கி அப்படியே நடித்துக் கொடுப்பார். அதோடு, உடன் நடிக்கும் சக நடிகர்களின் நடிப்பையும் கவனித்து அதற்கு ஏற்ற நடிப்பை தானும் வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் கமலை எடுத்துக் கொண்டால், ஒரு நடிகர் மட்டுமின்றி, இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர் என பலர் அவருக்குள் இருக்கிறார்கள். அதனால் பல விஷயங்கள் அவர் உன்னிப்பாக கவனித்து செயல்படுவார். கேமராவுக்கு முன்பு வரும்போது மட்டுமே அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவார் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !