மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
305 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
305 days ago
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. உலகமெங்கும் பத்தாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சூர்யா அளித்த ஒரு பேட்டியில், ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை கனவாகவே இருந்து வருகிறது. அது விரைவில் நனவாகும் என்று எதிர்பார்க்கிறேன். அதேசமயம் அப்படி நாங்கள் இணைந்து நடிக்கும் பட வாய்ப்பு என்பது தானாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எந்த இயக்குனரிடத்திலும் எங்களுக்கேற்ற கதையை உருவாக்குங்கள் என்று நானாக கூற மாட்டேன் என்று கூறியுள்ளார் சூர்யா. மேலும் திருமணத்திற்கு முன்பு சூர்யாவும், ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
305 days ago
305 days ago