பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம்
ADDED : 359 days ago
ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் சொல்லப்பட்டு அதனை ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் இயக்குவது அவ்வப்போது நடப்பதுண்டு. இது மாதிரியான ஒரு விஷயம் புராண பக்தி படத்திலும் நடந்துள்ளது. அந்த படம் 'தெய்வத் திருமணங்கள்'.
இந்த படத்தில் 'மீனாட்சி திருமணம்' என்ற கதையை ப.நீலகண்டன் இயக்கினார், கே.வி.மகாதேவன் இசை அமைத்தார், லதா மோகன், வரலட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்தனர். இரண்டாவது கதை 'சீனிவாசா திருமணம்'. இதனை கே.சங்கர் இயக்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். ரவிகுமார், ஸ்ரீபிரியா, ராஜம் நடித்தார்கள். மூன்றாவது கதை வள்ளி திருமணம். இதனை கே.காமேஸ்வரராவ் இயக்கினார், ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார். இதில் ராஜ்குமார், ஸ்ரீதேவி நடித்தனர். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.