உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ்

அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில ஹிட் தொடர்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளன. அண்மையில் சுந்தரி தொடரின் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று புதிய தொடர்கள் குறித்த அறிவிப்பை தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்னா டேவிஸ் நடிக்கும் ஆடுகளம் சீரியலின் புரோமோ அண்மையில் வெளியான நிலையில் தற்போது அன்னம் தொடரின் புரோமோவும் ரிலீஸாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அன்னம் தொடரில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அயலி வலை தொடரின் மூலம் பிரபலமான அபி நட்சத்திரா தான் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த தொடர் சுந்தரி சீரியலின் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !