நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா
ADDED : 582 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'விடுதலை'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 20ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி தற்போது இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற நவம்பர் 26ம் தேதி அன்று நடைபெறுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.