ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்!
                                ADDED :  343 days ago     
                            
                             
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி 'காந்தாரா' படத்திற்கு பிறகு இந்திய அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் முதல் முறையாக தெலுங்கில் 'ஜெய் ஹனுமான்' படத்தில் நடிக்கின்றார் என அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து இரண்டாவது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் ரிஷப் ஷெட்டி. அந்த தகவலின் படி, எஸ்.எஸ். ராஜமவுலியின் உதவி இயக்குநர் அஸ்வின் கங்கராஜூ இயக்கத்தில் தான் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது பிரீயட் ஆக்சன் டிராமா ஆக உருவாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பான் இந்திய படமாக உருவாகிறது. மேலும், இப்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.