உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார்
ADDED : 327 days ago
சமீபத்தில் நடிகர் அஜித்குமார் துபாயில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்லி இருந்தார். இந்த நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் தனது 47வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அஜித் குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பெரும்பாலும் நடிகர்கள் அரசியல் தலைவர்களுக்கு இதுபோன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில்லை.
இந்நிலையில் அஜித்குமார் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதோடு, இப்படி அஜித்தும் உதயநிதியும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்துக் கொள்வதன் பின்னணி என்ன என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.