மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
272 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
272 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛அண்ணா' தொடரில் மிர்ச்சி செந்தில், நித்யா ராம், பூவிலங்கு மோகன், சுனிதா என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் வீரா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகைகள் மூன்று பேர் வெளியேறி நான்காவதாக ஒரு நடிகையை நடிக்க வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், முத்துப்பாண்டி என்கிற முக்கிய கதாபாத்திரத்திலும் தற்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முன்னதாக நடித்து வந்த சத்யா, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டதால், அவருக்கு பதிலாக அப்சல் ஹமீது என்ற நடிகர் என்ட்ரி கொடுத்துள்ளார். இதற்காக கதையில் முத்துப்பாண்டி வெளியூர் செல்வதாக காண்பிக்கப்பட்டு பின் அப்சல் ஹமீது கமிட்டானவுடன் மீண்டும் முத்துப்பாண்டி திரும்புவது போல் காண்பித்துள்ளனர்.
272 days ago
272 days ago