மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
272 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
272 days ago
தமிழில் முதன் முறையாக சிறுமிகள் மட்டுமே நடித்த முதல் படம் 'விமோசனம்'. அதற்கு பிறகு அப்படி ஒரு முயற்சி நடந்ததாக தெரியவில்லை. 'விமோசனம்' என்பது அப்போது ராஜாஜி மதுவிலக்கை வலியுறுத்தியும், மதுவின் தீமைகளை விளக்கியும் நடத்தி வந்த பத்திரிகையின் பெயர். இந்த படமும் குடிகார பெற்றோர்களை திருத்தும் பெண் குழந்தைகளின் படமாக வெளிவந்தது.
இதில் சென்னை சிறுமிகள் சங்கீத வித்யாசாலையின் மாணவிகள் நடித்தனர். முக்கியமான கேரக்டர்களில் ஹேமலதா, காந்தாமணி, பேபி ஜெயா, இந்திரா, பாகிரதி என்ற சிறுமிகள் நடித்தனர். டி.மார்கோனி என்பவர் இயக்கி இருந்தார். ஜெயா பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது, ஹிந்துஸ்தான் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படத்தின் பிரதியோ, புகைப்படங்களோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு விளம்பர அறிவிப்பு மட்டுமே உள்ளது.
272 days ago
272 days ago