படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த்
ADDED : 318 days ago
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் தற்போது நடித்துள்ள படம் படை தலைவன். அன்பு என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்திருந்த பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படை தலைவன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான பாச உணர்வுகளை வெளிக்காட்டும் வகையிலான காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது. அதோடு இந்த டிரைலரில் நடிகர் விஜயகாந்த் முகம் காட்டும் காட்சியும், அவரது சூப்பர் ஹிட் பாடலான பொட்டு வச்ச தங்க குடம் பாடலும் இடம் பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கையில் படை தலைவன் படத்தில் சிறப்பு காட்சியில் ஏஐ மூலம் விஜயகாந்த் தோன்றுவார் என தெரிகிறது.