மேலும் செய்திகள்
பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா
269 days ago
விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா
269 days ago
பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன்
269 days ago
விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற இரண்டு படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார் அஜித். இதையடுத்து கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ளப் போகிறார். அதன்பிறகு சிவா இயக்கத்தில் ஐந்தாவது முறையாக அஜித் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அவர் இயக்கிய கங்குவா படம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிப்பாரா? மாட்டாரா ? என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது.
இந்த நேரத்தில் ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, கோட் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால் அவர் இரண்டு படங்களில் ஏற்கனவே கமிட்டாகி இருந்ததால் 2026ம் ஆண்டில் தான் கால்ஷீட் தர முடியும் என்று கூறிவிட்டார். அதன் காரணமாகவே மீண்டும் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம் வெங்கட் பிரபு. அதனால் கார் ரேஸ் போட்டி முடிந்த பிறகு சிவா, வெங்கட் பிரபு ஆகிய இருவரில் யாருடைய இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
269 days ago
269 days ago
269 days ago