பிப்ரவரி மாதத்தில் துவங்கும் தனுஷ் - விக்னேஷ் ராஜா படம்
ADDED : 316 days ago
ராயன் படத்திற்கு பின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி உள்ளார் தனுஷ். இப்படம் வெளியாகும் முன்பே அடுத்தப்படியாக ‛இட்லி கடை' என்ற படத்தை இயக்கி, நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பல படங்கள் தனுஷ் கைவசம் உள்ளது. இதில் அடுத்து எந்த படத்தில் தனுஷ் நடிப்பார் என்பது சினிமா வட்டாரத்தில் கேள்வியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ‛இட்லி கடை' படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் துவங்குகிறது. தற்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் விக்னேஷ் ராஜா கவனம் செலுத்தி வருகிறார்.