ஹைதராபாத்தில் 'விடாமுயற்சி' டப்பிங்கை முடித்த அஜித் குமார்
ADDED : 290 days ago
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித் குமார், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
கடந்த வாரம் வரை இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் டப்பிங்கை அஜித் முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். சமீபத்தில் இதன் டப்பிங்கை அஜர்பைஜான் நாட்டிலும் அஜித் செய்தார் என்று தெரிவித்திருந்தார்கள்.
'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வந்தாலும், இந்தப் படத்திற்கு அனைத்து முன்னுரிமைகளையும் கொடுத்து திட்டமிட்டபடி அஜித் முடித்துக் கொடுத்ததாகத் தகவல். மற்ற இறுதிக்கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது. அதற்கடுத்து படத்தின் டிரைலரும் வெளியாகப் போகிறது.