மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
255 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
255 days ago
கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான பணி நடைபெற்று வந்தது. ஜெயிலர் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் கூடுதலாக ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தமிழில் கோப்ரா படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி தற்போது லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். இதையடுத்து மார்ச் மாதத்தில் ஜெயிலர் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.
255 days ago
255 days ago