உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான் - ரஜினி புத்தாண்டு வாழ்த்து

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான் - ரஜினி புத்தாண்டு வாழ்த்து

2024ம் ஆண்டு முடிந்து 2025 பிறந்துவிட்டது. உலகம் முழுக்க ஆங்கில புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

‛‛நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025'' என குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி
எக்ஸ் தளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து சென்றார்.

நடிகர் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‛கூலி' படத்தில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !