மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
274 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
274 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
274 days ago
கமல்ஹாசனின் நூறாவது படம் 'ராஜபார்வை'. ஹாசன் பிரதர்ஸ் சார்பில் அவரே தயாரித்து இருந்தார். கமல்ஹாசன் உடன் மாதவி, சந்திரகாசன், சாருஹாசன், ஒய் ஜி மகேந்திரன் நடித்திருந்தனர். பிரபல தயாரிப்பாளர் எல் வி பிரசாத் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். சங்கீதம் சீனிவாசராவ் படத்தை படத்தை இயக்கினார்.
பார்வையற்ற ஒரு வயலின் இசை கலைஞனுக்கு வரும் காதலும் அதனால் வரும் பிரச்னைகளும் தான் படத்தின் கதை. இந்தப் படத்தின் திரைக்கதை 1972ம் ஆண்டு வெளிவந்த 'பட்டர் ப்ளைஸ் ஆர் ப்ரீ' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவானது. இந்த படத்தின் கதையும் பார்வையற்ற வயலின் இசைக்கலைஞனின் காதல் கதை தான். ஆனால் ராஜ பார்வை படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டது. 1967ம் ஆண்டு வெளிவந்த 'தி கிராஜுவேட்' என்ற படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தழுவி ராஜபார்வை கிளைமேக்ஸ் வைக்கப்பட்டது.
படம் வெளியாகி விமர்சனகளால் கொண்டாடப்பட்டாலும், எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது. 'அந்தி மழை' இப்போதும் பொழிந்து கொண்டிருக்கிறது.
274 days ago
274 days ago
274 days ago