சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது!
ADDED : 273 days ago
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா, அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் 25வது படத்தை இயக்கப் போகிறார். ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க, வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். ஒரு முக்கிய கேரக்டரில் அதர்வா நடிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தபோது 'புறநானூறு' என்று டைட்டில் வைத்திருந்தார் சுதா. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நிலையில் இந்த படத்திற்கு '1965' என்று டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் 1965 காலகட்ட கதையில் உருவாவதால் இந்த டைட்டிலை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.